விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பெண் சூப்பிரண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
அண்மையில் திருச்சுழி அருகே கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பெண் அதிகாரி காயத்ரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அருப்புக்கோட்டையில் அதிக பெண் அதிகாரிகள் உள்ள காரணத்தால் தான் காயத்ரி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.