நத்தம் அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடு கட்டி கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம், கம்பிளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பட்டி பகுதியில் 75 வயதுடைய பார்வதி என்ற மூதாட்டி ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார்.
மிகவும் சிதிலமடைந்த காணப்படும் குடிசை வீட்டில் மூதாட்டி வசித்து வருவதை கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மூதாட்டி பார்வதிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீட்டை கட்டி தந்தனர்.
மேலும், மூதாட்டிக்கு 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் அவர்கள் வழங்கினர். அப்போது, தமக்கு உதவி செய்த தன்னார்வலர்களுக்கு மூதாட்டி நன்றி தெரிவித்து கொண்டார்.