அருணாச்சல பிரதேசத்தில் சீன ஊடுருவல் குறித்த செய்திகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், வரையறுக்கப்படாத இடங்களில் அடையாளங்களை வரைவதால், அந்தப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக அர்த்தமல்ல என்று கூறியுள்ளார்.
எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடுக்கு அருகில் யாரையும் வர அனுமதிக்க மாட்டோம் எனவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.