தெலங்கானாவில் பால் ஏற்றி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நலகொண்டா மாவட்டத்தில் உள்ள மிரியாலகுடா அருகே டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டேங்கர் உடைந்து அதிலிருந்து பால் கொட்டியது. இதனை அறிந்த மக்கள் முண்டியடித்துக்கொண்டு பாத்திரங்களில் பாலை பிடித்து சென்றனர்.