சிவகங்கையில் அமைச்சர் உதயநிதிக்காக மைதானத்தை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், மாவட்ட மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததாக மார்தட்டி கொள்ளும் அமைச்சர் அன்பில் மகேஸ் என்ன சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கொள்வாரா என வினவியுள்ளார்.
மேலும், அமைச்சர் உதயநிதியின் வருகைக்காக மாணவர்களை இப்படி துன்புறுத்துவதா என்றும், இந்த செயலில் மாணவர்களை ஈடுபடுத்தியவர்கள் மீது நடடிக்கை பாயுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.