ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் 12 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதன் காரணமாக ஆயிரத்து 287 தொடக்கப் பள்ளிகளில் இன்று பெரும்பாலான பள்ளிகள் செயல்படவில்லை என கூறப்படுகிறது. , போராட்டம் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாமென ஆசிரியர்கள் வாய்மொழி உத்தரவாக கூறியதாலும், பள்ளிகள் மூடப்பட்டதாலும் பெரும்பாலான மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேபோல, பெரம்பலூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ஒருநாள் அடையாள விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி மூடப்பட்டது. இதனால், தற்காலிக ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.