தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் உயிரிழந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக காசா சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் தெற்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பல குடும்பங்கள் மண்ணில் புதையுண்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.