திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே ஓடும் பேருந்தின் முன் சக்கரம் கழன்ற நிலையில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பங்களாமேடு பகுதியில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன் சக்கரம் கழன்றதை அறிந்து, சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.