விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வேணுகோபால சுவாமி கோயிலில் திருத்தேர் வெள்ளோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வேணுகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வசந்த விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாத நிலையில், தேரை புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.