முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி.துரைசாமி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது :
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகமாநிலத் துணைத்தலைவருமான அன்பு அண்ணன் வி.பி.துரைசாமி அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடரவும், தொடர்ந்து இளைஞர்களை வழி நடத்தவும் வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.