மணிப்பூர் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால், 2 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வன்முறைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் காவல் துறை தலைமை இயக்குநரும், அரசின் தலைமை ஆலோசகரும் பதவி விலக கோரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதிலும் வன்முறை ஏற்பட்டதால், நிலைமையக் கட்டுப்படுத்தும் நோக்கில் இம்பால் மேற்கு, கிழக்கு மற்றும் தெளபால் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சுகாதாரப் பணியாளர்கள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள், நீதிமன்ற அலுவலர்களுக்கு தடை உத்தரவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.