தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இம்மானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பரமக்குடி நகர் போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டதுடன், அசம்பாவித சம்பவங்கள் தடுக்க, 150 நவீன சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், தியாகி இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வருவோர், இரு சக்கர வாகனங்களில் வரக்கூடாது என்று ஐஜி பிரேம் ஆனந்த் சின்கோ தெரிவித்துள்ளார்.