ஹேமா கமிட்டி விவகாரத்தில் கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொந்தரவை எதிர்கொண்டதாக ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டது சர்ச்சைக்கு வழிவகுத்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஹேமா கமிட்டி அறிக்கையை 4 ஆண்டுகள் கிடப்பில் போட்டு, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியது.
திரையுலகு மட்டுமன்றி சமூகத்தில் பெண்களின் பிரச்னைகளைக் களைய மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக கேரள அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமைப்பு சாரா துறைகளில் பெண்களின் பாலியல் விவகாரத்துக்கு தீர்வு காண சட்டமியற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தியது.
ஹேமா கமிட்டி அறிக்கையை சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் ஊடகத்தை கேரள அரசு கட்டுப்படுத்த கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.