டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் Dosa King - விரைவில் படப்பிடிப்பு!
Sep 11, 2025, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் Dosa King – விரைவில் படப்பிடிப்பு!

Web Desk by Web Desk
Sep 10, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேட்டையனுக்குப் பிறகு Junglee Pictures-ன் பான்-இந்தியன் பிரம்மாண்ட படம், Dosa King படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.

மெகாஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்த வேட்டையான் அக்டோபர் 10 ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டைத் தொடர்ந்து, புகழ்பெற்ற இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மீண்டும் ஜங்கிலி பிக்சர்ஸின் Dosa King-குடன் மற்றொரு படத்தை வழங்க உள்ளார்.

Badhaai Do மற்றும் Raazi போன்ற படங்களை தயாரித்த ஜங்கிலி பிக்சர்ஸ்  ஞானவேல் உடன் இணைந்துள்ளது. டி.ஜே.ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் ஆகியோரால் எழுதப்பட்ட, இந்த பான்-இந்தியன் திரைப்படம் ஜீவஜோதி மற்றும் பி. ராஜகோபாலின் மோதலால் ஈர்க்கப்பட்டு, லட்சியம், அதிகாரம் மற்றும் நீதிக்கான போருக்கு களம் அமைக்கிறது. ஜீவஜோதி சாந்தகுமாரின் (Life Rights) உரிமையை ஜங்கிலி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

P.Rajagopal vs State of Tamilnadu

18 ஆண்டுகால கடுமையான சட்டப் போருக்குப் பிறகு, நீதி வழங்கப்பட்ட நிலையில் , முறையாக உரிமைகளை பெற்ற பிறகு, மிக பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாக்கப்படவுள்ளது.

தனது கருத்துச்செறிவுமிக்க கதைக்களங்கள் மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்களுக்காக கொண்டாடப்பட்ட ஞானவேல், உலகளவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கவுள்ளார்!

இப்படத்தின் இணை எழுத்தாளரான ஹேமந்த் ராவ், கன்னடத்தில், Godhi Banna Saadharna Manushya, Kavaludaari, Saptta Saagaradaache Ello-Side A/ Side B, போன்ற மிக பெரிய வெற்றி படங்களை எழுதி இயக்கியவர். அவர் இந்தி சினிமாவில் பரவலாகப் பாராட்டப்பட்ட “Andhadhun” என்ற படத்தின் இணை-எழுத்தாளர்.

ஞானவேல் எழுதி இயக்கிய Jai Bhim மிக பெரிய தாக்கத்தை உருவாக்கிய திரைப்படம்!
, அத்துடன் “பயணம்” மற்றும் “கூடத்தில் ஒருத்தன்” போன்ற குறிப்பிடத்தக்க படங்களும் அவரது கைவண்ணத்தில் உருவானவை!

தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய டி.ஜே.ஞானவேல், “பத்திரிக்கையாளராக இருந்த காலத்திலிருந்தே ஜீவஜோதியின் கதையைப் பின்பற்றி வருகிறேன். பத்திரிக்கைகள் பல விவரங்களை பரபரப்பாக்கிய போதும், கதையின் பெரும்பகுதி சொல்லப்படவில்லை. ‘Dosa King’ கதையின் குற்றம் மற்றும் திரில்லர் அம்சங்களை மையமாகக் கொண்டு, அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அம்பலப்படுத்தும் கடினமான கதை.

நன்கு ஆராய்ந்து, வழக்கில் சொல்லப்படாத கருத்துக்களை பிணைத்து, புதியதொரு கண்ணோட்டத்துடன் ஆழமான கதையைச் சொல்ல விரும்புகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நேரில் பார்த்த கதையைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் படம் எனக்கு கிடைத்த வாய்ப்பாகும், மேலும் சொல்ல வேண்டிய முக்கியமான கதைகளை ஆதரிக்கும் ஸ்டுடியோவான ஜங்கிலி பிக்சர்ஸ் உடன் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

ஜங்கிலி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) , Amritha Pandey, கூறுகையில், “தோசா கிங், ஒரு பரபரப்பான கதையாகும், இது, நிஜத்தின் பிரதிபலிப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த ஒரு சுவையான கலவையாக உருவாக்கப்படவுள்ளது.

இந்த திரைப்படத்தை திரையில் வடிக்க, ஞானவேலுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஹேமந்த் மற்றும் ஞானவேல் ஆகியோர், விரிவான ஆராய்ச்சியின் மூலம், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட உருவாக்கி, திருப்பங்கள் மற்றும் நுணுக்கங்கள் நிறைந்த ஒரு ஸ்கிரிப்டை வடிவமைத்துள்ளனர்.விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளோம்  என தெரிவித்தார்.

 

Tags: Junglee PicturesDJ GnanavelDosa KingP.Rajagopal
ShareTweetSendShare
Previous Post

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் – பரமக்குடியில் 7, 000 போலீசார் குவிப்பு!

Next Post

வந்தாச்சு Google TV Streamer – இனி கேபிள் டிவி, செட்டாப் பாக்ஸ் நோ!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies