ஸ்மார்ட் ஹோம் அனுபவத்துடன் கூடிய அனைத்து பொழுதுபோக்குகளையும் வழங்கும் டிவி ஸ்ட்ரீமரை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திஉள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்ட நேர்த்தியாக இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஓடிடி வருகைக்கு பிறகு கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக குறைந்துவிட்டது. மொபைல் செயலி மூலமே பெரும்பாலானோர் வீடியோக்களைப் பார்க்கவும் பகிரவும் செய்கின்றனர்.
இந்நிலையில், கேபிள் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ்களுக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கூகுள் டிவி ஸ்ட்ரீமர் சந்தைக்கு வந்துள்ளது.
Chromecast போல் அல்லாமல், Google TV ஸ்ட்ரீமர் டிவியின் முன் அனைத்து பொழுதுபோக்குகளையும் பெறும் வகையில் இந்த ஸ்ட்ரீமர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்ட்ரீமர் மூலம் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Google TV ஸ்ட்ரீமரில் 7,00,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் YouTube, Netflix, Disney+, Apple TV, ஓடிடி சேனல்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட இலவச நேரலை டிவி சேனல்களை அதாவது கிட்டத்தட்ட 7 லட்சம் திரைப் படங்களை ஒரே இடத்தில் இருந்தபடியே பயன்படுத்த முடியும் என்றும், அனைத்து சந்தாக்களிலும் உள்ளடக்கப் பரிந்துரைகளைக் கையாளவும், Google AI Gemini- பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்ட்ரீமர் மூலம் 4K HDR ரெசொலூஷனில் வீடியோக்களைப் பார்க்க முடியும் என்றும், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) போன்ற அல்ட்ரா பிரீமியம் வீடியோக்களையும் பார்த்து ரசிக்க முடியும் என்றும் டால்பி டிஜிட்டல் (Dolby Digital), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வகைகளில் ஆடியோக்களைக் கேட்டு ரசிக்க முடியும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
4 ஜிபி RAM, 32 ஜிபி RAM, WIFI 802, Bluetooth v5.1,மற்றும் WIRELESS இணைப்பு, எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி-சி (USB-C) மற்றும் ஈதர்நெட் (Ethernet) இணைப்பும் இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமரில் உள்ளது.
ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) மற்றும் ஸ்மார்ட் ஹோம் கனெக்டிவிட்டியும் உள்ளதால் இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமரில் SMART CAMERA , LIGHT மற்றும் மொபைல், ஸ்பீக்கர் காஸ்ட்,வாய்ஸ் ரிமோட் (Voice Remote) ஆம்பியன்ட் மோட் (Ambient Mode), ஹோம் பேனல் (Home Panel), காஸ்டிங் & குரூபிங் ஆகிய அம்சங்களும் உள்ளன.
இத்தனை சிறப்பு அம்சங்களுடன் கூகுள் டிவி ஸ்ட்ரீமர் விளங்குவதால் , இதன் விலை சற்று அதிகமாகவே அமைந்திருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 8,390 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கூகுள் டிவி ஸ்ட்ரீமர், ஹேசல் (Hazel) மற்றும் போர்சிலைன் (Porcelain) ஆகிய வன்ணங்களில் கிடைக்கிறது.
இப்போதைக்கு, US Google Store-ல் மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கும் கூகுள் டிவி ஸ்ட்ரீமருக்கு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியில் இருந்தே முன்பதிவு தொடங்கியிருக்கிறது. செப்டம்பர் 24ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
விரைவில் இந்தியாவிலும் கூகுள் டிவி ஸ்ட்ரீமர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Amazon Fire TV Stick மற்றும் high-end Apple TV 4K இடையே ஒரு நவீன சாதனமாக கூகுள் டிவி ஸ்ட்ரீமர் அமைந்திருப்பதே மக்களிடம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.