பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 609 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2 கோடியே 94 லட்சத்து 63 ஆயிரத்து 337 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 கோடியே 64 லட்சத்து 43 ஆயிரத்து 972 வீடுகள் கட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் நாட்டிலியே அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 36 லட்சத்து 66 ஆயிரத்து 197 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாகவும், தெரிவித்த மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், தமிழகத்தில் மொத்தமாக 7 லட்சத்து 41 ஆயிரத்து 469 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 லட்சத்து 21 ஆயிரத்து 609 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து விட்டன எனவும் மத்திய அரசு தெரிவித்தது.(GFX OUT)