சர்வதேச அளவில் செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலியை கையாளும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
செமிகண்டக்டர் எதிர்காலத்தை வடிவமைப்பது என்ற கருப்பொருளில் மூன்று நாள் மாநாடு இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள இல்லத்தில் தொழில்துறை தலைவர்கள் உடன் பிரதமர் மோடி சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது நிர்வாகிகளின் யோசனைகள் வணிகத்தை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று பிரதமர் கூறினார்.
டிஜிட்டல் யுகத்தின் அடிப்படையானது செமிகண்டக்டர் என்றும், நமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட செமிகண்டக்டர் தொழில் அடித்தளமாக இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதில், SEMI, Micron உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் CEOக்கள், தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.