சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியில் ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
மூன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட நங்கவள்ளி ஏரி முழுமையாக நிரம்பியதால் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.