திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகள ஓட்ட போட்டியை தொடங்கி வைக்க திமுக எம் எல் ஏ-க்கள் வர காலதாமதம் ஆனதால், அமைச்சர் காந்தி மற்றும் மாணவ, மாணவிகள் வெயிலில் காத்து கிடந்தனர்.
முதலமைச்சர் கோப்பைகான ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் துவக்க விழாவில், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, திருத்தணி எம்எல்ஏ சந்திரன், திருவள்ளூர் எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் ஆகியோர் வருவதற்கு கால தாமதம் ஆனதால்போட்டியில் பங்கேற்க வந்த மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.