தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திற்கு தொலைபேசி மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்காத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனை அடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.