சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் தடை ஏற்பட்டதால் ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து அங்கு பணியாற்றிய அதிகாரிகள் ஊழியர்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதேநேரத்தில் ஜெனரேட்டரும் பழுதானதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் ஆட்சியர் அலுவலகம் இருளில் மூழ்கியது.
இதனால் உரிய நேரத்தில் பணியாளர்கள் பணியை முடித்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.