மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ஆதார் அட்டையை இல புதுப்பிக்க செப்டம்பர் 14-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு அலுவலகங்களில் உள்ள ஆதார் சேவை மையங்களில் இணையதள சேவை மந்தமாக உள்ளதால், கே.கே நகர் பகுதியில் உள்ள ஆதார் மையத்தில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் திரண்டனர்.
மேலும், அதார் அட்டையை புதுப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.