ப்ரோ கபடி லீக் தொடரில் இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என தமிழ் தலைவாஸ் அணியின் வியூக பயிற்சியாளர் சேரலாதன் தெரிவித்துள்ளார்.
ப்ரோ கபடி லீக் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் சார்பில் வீரர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் உதய்குமார், வியூக பயிற்சியாளர் சேரலாதன், தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய வியூக பயிற்சியாளர் சேரலாதன், அதிக தமிழ்நாடு வீரர்கள் எடுக்கப்படுவதில்லை. எனினும் தமிழ்நாடு வீரர்களை தேர்ந்தெடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.