ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் மூழ்கும் சிறுவர்களை அதிலிருந்து மீட்டு, ஓடி ஆடி விளையாட வைக்கும் வகையில், சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்த தடை விதிக்க ஆஸ்திரேலிய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அந்த வகையில், சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்த குறைந்தபட்ச வயது 14 முதல் 16-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.