ஆந்திராவில் மினி லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஏலூரு மாவட்டத்தில் உள்ள போர்ம்மபாள்யம் கிராமத்தில் இருந்து முந்திரிப் பருப்பு தோல் ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.