இஸ்ரேல், காசா இடையேயான போர் ஒரு வருடத்தை நெருங்குகிறது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலால் காசாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உட்பட 40 ஆயிரத்திற்க்ம் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் மக்கள் தங்கியுள்ள இடத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதனால் இருப்பிடம், உணவு என அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.