செர்பியாவில் 2-ம் உலகப்போரின் போது ஆற்றில் மூழ்கிய ஒரு கப்பல் தற்போது சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
2-ம் உலகப்போரின் போது வெடிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற நாஜிக் கப்பல் ஒன்று டானூப் ஆற்றில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. தற்போது வறட்சி காரணமாக ஆற்றில் நீர் முற்றிலும் குறைந்ததால் படகு சிதைந்த நிலையில் பிரஹேவோ துறைமுகம் அருகே கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இந்த கப்பலை ஆற்றிலிருந்து விரைவில் அகற்றப்படும் எனவும் கப்பல் குறித்து ஆராய்ச்சி நடத்தப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.