செனகல் நாட்டு கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த அகதிகள் படகு மூலம் சட்டவிரோதமாக செனகலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது படகு திடீரென படகு கடலில் கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்து சென்ற மீட்பு படையினர் 26 பேரை சடலமாக மீட்டனர். மேலும் மாயமானவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.