45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று தொடங்குகிறது.
ஸ்விஸ்’ முறையில் நடைபெறும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்திற்காக கூடுதலாகா 30 நிமிடங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிலிருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில் இந்திய சார்பில் அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா உள்ளிட்ட வீரர்களும், மகளிர் பிரிவு அணியில் டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.