11-வது புரோ கபடி லீக் போட்டியின் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் சார்பில், அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில், தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் உதய்குமார், வியூக பயிற்சியாளர் சேரலாதன், தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் பங்கேற்றனர். இதில் அணியின் கேப்டனாக சாகர் ரதி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.