டெல்லியில் பெய்து வரும் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. ஆர்.கே.புரம் செக்டார், ஃபிரோஸ்ஷா சாலை, இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது.
இந்நிலையில், டெல்லி அக்ஷர்தாம் கோயிலில் இருந்து சராய் காலே கான் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.