பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்ஷுக் மாண்டவியா ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், வரும் 2028ல் நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ என தெரிவித்தார்.
மேலும், பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 75 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும் வெண்கலம் வென்றவர்களுக்கு 30 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் எனவும் மன்சுக்மாண்டவியா அறிவித்துள்ளார்.