பொங்கல் பண்டிகைக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளையும், ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய விரும்புவோர் நாளை மறுநாளும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல போகி தினத்தன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15ம் தேதி முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் இந்த முன்பதிவு ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் அல்லது டிக்கெட் முன்பதிவு மையங்களில் செய்துகொள்ளாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.