தேச விரோத கருத்துக்களை பதிவிடுவதே ராகுல் காந்திக்கு வாடிக்கை என மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தேச விரோதம் மற்றும் இடஒதுக்கீடு எதிர்ப்புகளை ஆதரிப்பது உள்ளிட்ட அனைத்து செயல்களின் மூலம் தேசத்தின் பாதுகாப்பிற்கு ராகுல்காந்தி அச்சுறுத்தலை விடுக்கிறார் என அமித்ஷா தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த பதிவில் பாஜக இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பத்தை ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.