திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் குடிபோதையில் மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், பணியில் இருந்த நல்லதம்பி என்ற மருத்துவர், நோயாளிக்கு இ.சி.ஜி. எடுத்துவிட்டு, அதனை வைத்து மற்றொரு நோயாளிக்கு மருத்துவம் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவர் நல்லதம்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நல்லதம்பி மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து நோயாளிக்கு சிகிச்சை பார்த்தது தெரியவந்தது. இதனால் நல்ல தம்பியிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.