இரவு நேரங்களில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இரவு நேரங்களில் பயணிப்போருக்காக பேருந்துகளை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் குறிப்பிட்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வரும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.