இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியவர் சுவாமி விவேகானந்தர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டில் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என தனது உரையை ஆரம்பித்தார்.
அவருக்கு முன் பேசியவர்கள் எல்லாம் “கணவான்களே .. சீமாட்டிகளே ” என்று பேச்சைத் தொடங்கியபோது, விவேகானந்தரோ அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என பேசி பெண்களை முன்னிலைப்படுத்தினார். அவரது உரை அங்கு திரண்டிருந்தவர்களை விழித்தெழச் செய்தது. உலகையே அவரை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. 1893ஆம் ஆண்டு இதே நாளில் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் வழங்கிய தலைசிறந்த உரையை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
1893 ஆம் ஆண்டு இதே நாளில், சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் தனது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை நிகழ்த்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாடு குறித்த பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தர் எனக்கூறியுள்ள அவர், விவேகானந்தரின் வார்த்தைகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.