திண்டுக்கல்லில் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் இதனால், கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு பாதிப்பு ஏற்பட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் டெங்கு சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.