சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த கோயிலுக்கு கடந்த 1971ம் ஆண்டு பக்தரால் தானமாக வழங்கப்பட்ட சுப்புலட்சுமி என்ற பெண் யானை, தீ விபத்தில் காயமடைந்தது. இதனையடுத்து யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற யானையின் இறுதிச் சடங்கில் அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், தவத்திரு பொன்னம்பல அடிகளார் கலந்துகொண்டு யானைக்கு அஞ்சலி செலுத்தினார்.