மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறை சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகாதது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கெளரவ் பாட்டீயா, இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் முற்றிலும் விடுவிக்கப்படவோ அல்லது குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படவோ இல்லை என தெரிவித்தார்.
விசாரணை நீடிப்பதால் கெஜ்ரிவால் விடுவிக்கப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அவர், முறைகேடு வழக்கில் சிறை சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகாதது ஏன் என்பதற்கு ஆம் ஆத்மி கட்சி பதிலளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.