ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
வரும் 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி சபரி மலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் சாந்தி மகேஸ் நம்பூதிரி நடையை திறந்து வைக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து நாளை முதல் 21-ம் தேதி வரை சுவாமிக்கு பூஜைகள் நடைபெறும் எனவும் ஆன்-லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.