திருநெல்வேலியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தலைமை சர்வேயர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை சாந்தி நகரை சேர்ந்த தலைமை சர்வேயரான மாரியப்பன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர், லஞ்சம் வாங்கியதற்கான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைபற்றினர்.
மேலும், அவருடைய வங்கிக் கணக்கில் கணக்கில் வராத 64 லட்சத்து 74 ஆயிரத்து ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மாரியப்பன் மீது அளவிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.