பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. தரம் உயர்த்தப்பட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உயர்கல்வி சிறப்பு குறித்த செவ்வரங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய அளவில் முதல் இடத்தை ஐஐடி சென்னையும், மாநில அளவில் முதல் இடத்தை அண்ணா பல்கலைக்கழகமும் பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக கூறினார்.
பி.எச்.டி. படிப்புக்கான தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், பி.எச்.டி. படித்தவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஐஐடி சென்னை சர்வதேச தரத்தில் உயர்த்தப்பட்டதால் பலரும் பயனடைந்ததாக தெரிவித்தார். மேலும் மாணவர்கள் தரமான அளவில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.