மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் உடல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி காலமானார்.
இதையடுத்து அவர் பயின்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதற்கு இணங்க யெச்சூரியின் உடல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.