ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கீட்ஷ்வார் மாவட்டம் சாட்ரோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்தனர்.
இருதரப்புக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச்சண்டையில் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இருப்பினும் அந்த பகுதியில் இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை நீடிக்கிறது. இதேபோன்று, கத்துவா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
















