சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொம்பகரனேந்தலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தலைமையாசிரியர், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் புத்தகம் வாங்குவதற்காக பணம் வசூல் செய்ய ஆசிரியர்களை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதை தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது வீண்பழி சுமத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் தலைமையாசிரியரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.