பள்ளிக்கல்வித்துறையில் தொடரும் சர்ச்சை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிக்கல்!
Sep 10, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிக்கல்வித்துறையில் தொடரும் சர்ச்சை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிக்கல்!

Web Desk by Web Desk
Sep 15, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து அரங்கேறும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ராஜினாமா செய்யக்கோரும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அவல நிலை குறித்தும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான இணையத் தாக்குதல்களின் பின்னணி குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பள்ளிக்கல்வித்துறை மீதும், அதன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் அடுத்தடுத்த விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மூலம் அறிவிப்புகள் வெளியாவதும், அமைச்சர் கவனத்திற்கு சென்ற பின் அவை வாபஸ் பெறப்படுவதும் வாடிக்கையாகி வந்த நிலையில், அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் அரங்கேறும் தொடர் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே அதிகரித்து வரும் சாதிய மோதல் சம்பவங்கள், வகுப்பறையில் கஞ்சா புகைப்பது , மது அருந்துவது போன்று வெளியாகும் புகைப்படங்கள், ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள் என அடுத்தடுத்து அரங்கேறும் அவலச் சம்பவங்கள் பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளன.

சிவகங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்வுக்கான மைதானத்தை சுத்தம் செய்யும் பணிக்கும், விளையாட்டு கம்பங்களை தூக்கும் பணிக்கும் விடுதி மாணவர்களை ஈடுபடுத்துவது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான அரசுப்பள்ளி கட்டடங்கள் தரமற்ற நிலையில் இருப்பதால் எப்போது இடிந்து விழும் என்ற ஆபத்து மிகுந்த சூழலிலேயே பள்ளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழலில், அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் மத்திய அரசின் பி.எம் ஸ்ரீ திட்டத்திலும் அரசியல் காரணமாக இணைய மறுப்பது தமிழக பள்ளிக்கல்வித்துறையை அதள பாதாளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி என கல்வியாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

குழப்பங்கள், குளறுபடிகள், முறைகேடு புகார்கள் நிறைந்திருக்கும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் நிலையில், அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய மகா விஷ்ணு விவகாரம், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திமுகவினரே ராஜினமா செய்ய சொல்லும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

முதலமைச்சருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் நெருக்கமானவராகவும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உற்ற நண்பராகவும் இருப்பதே அன்பில் மகேஷ் மீது நடவடிகை எடுப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான தாக்குதலுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி பின்னணியில் இருக்கும் தகவல் வெளியாகி திமுகவில் உட்கட்சி பூசலை உண்டாக்கியுள்ளது.

திமுகவில் உள்ள மூத்த தலைவர்களுக்குள்ளான உட்கட்சி பூசல்களே முடிவுக்கு வராத நிலையில், உதயநிதி ஸ்டாலின் நண்பர்களான டி.ஆர்.பி. ராஜாவுக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குமான உட்கட்சி பூசல் திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: education departmenteducation ministerDMK governmentAnbil Mahesh Poiyamozhi
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – ஆடிப்பாடி உற்சாகம்!

Related News

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies