பிரதமர் இல்லத்தில் வளர்ந்த பசு ஒன்று புதிய கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “எனது இல்லத்தில், தாய் பசு ஒரு புதிய கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது, அதன் நெற்றியில் ஒளியின் சின்னம் உள்ளது. எனவே, அதற்கு ‘தீப்ஜோதி’ என்று பெயரிட்டுள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிறந்த கன்றுக்குட்டியை பிரார்த்தனை மற்றும் பாசத்துடன் வரவேற்பதை பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் கன்றுக்குட்டியுடன் செல்லமாக விளையாடுவதையும், அதன் நெற்றியில் மென்மையான முத்தங்களை இடுவதையும் பார்க்க முடிகிறது.
பிரதமர் தனது இல்லத்தில் உள்ள தோட்டத்தில் கன்றுக்குட்டியை பிடித்து உலா செல்வதையும் காணமுடிகிறது.
கடந்த ஜனவரியில், பிரதமர் மோடி, மகர சங்கராந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில், தேசிய தலைநகரில் உள்ள தனது வீட்டில் பசுக்களுக்கு உணவளித்தது குறிப்பிடத்தக்கது.