தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
வனச்சரகம் மேக்கரை மற்றும் வடகரை பகுதியில் கடந்த சில தினங்களாக விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனகாவலர்கள் யானை கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.