சனாதன தர்மம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியவர்கள் திடீரென அமைதியாகி விட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சித்தார்.
கிண்டி ராஜ்பவனில் ஸ்ரீ ராமரும் தமிழகமும் இணைபிரியா பந்தம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தகத்தை வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழகத்தில் உள்ள சிலர் ஸ்ரீராமரை வட இந்திய கடவுளாக ஜோடிக்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.
சனாதன தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை என தெரிவித்த அவர், சனாதனம் அனைத்து இடங்களிலும் உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் ஸ்ரீராமரின் அருள் நிறைந்துள்ளதாக ஆர்.என்.ரவி தெரிவித்தார்.